தமிழில் பால்புது பதங்கள் – Queer terms in Tamil


இந்த பக்கத்தில் LGBTQIA+ (பால்புது, குயர்) அடையாளங்களை குறிக்க தமிழில் பரவலாக உபயோகிக்கப்படும் வார்த்தைகள் பட்டியலிடப்பட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் தனிநபர்கள் பொருத்தமான வார்த்தைகளை உபயோகிப்பது முக்கியமாகும்.

ஒரு மொழி மற்றும் அதை சார்ந்த (பால்புது) பதங்கள் பரிணாமம் அடைந்து கொண்டே உள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள பதங்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு துவக்கப் புள்ளியாகும். தனிப்பட்ட நபர்களை குறித்து எழுதும் போது அவர்களின் பதத் தேர்வை பயன்படுத்தவும். 

பால்புது பதங்களை விளக்கத்துடன் தெரிந்து கொள்ள…

SOGIESC

SOGIESC – Sexual Orientation, Gender Identity and Expression, and Sex Characteristics

Sexual Orientation: பாலீர்ப்பு

Gender, Gender Identity: பாலினம், பாலின அடையாளம்

Gender Expression: பாலின வெளிப்பாடு

Sex Characteristics: பால் பண்பு

Sexuality: பாலியல்பு

Homosexual(ity)

Homosexual(ity): ஒருபாலீர்ப்பு, தன்பாலீர்ப்பு

Homosexual person: ஒருபாலீர்ப்புடையவர், ஒருபாலீர்ப்புடைய நபர்

Lesbian: லெஸ்பியன், ஒருபாலீர்ப்புடைய பெண்

Gay – கேய், ஒருபாலீர்ப்புடைய ஆண்

Same sex couple – ஒரு பால் இணையர்

Same gender couple – ஒரு பாலின இணையர்

Bisexual(ity)

Bisexual(ity) – இருபாலீர்ப்பு

Bisexual person: இருபாலீர்ப்புடையவர், இருபாலீர்ப்புடைய நபர்

Bisexual woman – இருபாலீர்ப்புடைய பெண்

Bisexual man – இருபாலீர்ப்புடைய ஆண்

Transgender

Transgender, Trans person: திருநர் (includes both திருநங்கை and திருநம்பி)

Trans woman: திருநங்கை

Trans man: திருநம்பி

Pansexual(ity)

Pansexual(ity) – அனைத்துப்பாலீர்ப்பு

Pansexual person: அனைத்துப்பாலீர்ப்புடையவர், அனைத்துப்பாலீர்ப்புடைய நபர்

Pansexual woman – அனைத்துப்பாலீர்ப்புடைய பெண்

Pansexual man – அனைத்துப்பாலீர்ப்புடைய ஆண்

Queer; LGBTQIA+

Queer (person): பால்புது, பால்புதுமை, பால்புதுமையினர், குயர், குயர் நபர்

LGBTQIA+ Pride, Queer Pride (parade): பால்புது சுயமரியாதை (பேரணி)

Intersex

Intersex: இன்டர்செக்ஸ், ஊடுபால்

Intersex person, Person with intersex variations – ஊடுபால்பண்புடையவர், பன்முக பால்பண்பு உடையவர்

Asexual(ity) & Agender

Asexual person: பாலீர்ப்பு அற்றவர், அபாலீர்ப்பு உடையவர், அபாலீர்ப்பு உடைய நபர், பாலீர்ப்பு அற்ற நபர்

Agender: பாலிலி

Agender person: பாலிலார்

Gender diverse

Gender diverse: பன்முக பாலின அடையாளம் 

Genderqueer: பாலின வரைமுறைக்கு அப்பாற்பட்டவர்

Genderfluid: திரவ நிலை பாலின அடையாளம்

Nonbinary

Nonbinary: (பாலின) ஈர்மறைக்கு அப்பாற்பட்டவர்

Gender nonconforming (GNC) person: பாலின அடையாளங்களுடன் ஒத்துப்போகாதவர், பாலின உறுதிதன்மை அற்ற(வர்).

 

Identity

Self ID, Self Identification: சுய அடையாளம்

Coming out: வெளிப் படுத்திக் கொள்ளுதல்

Deadname: வழங்கப்பட்ட பெயர்

Preferred name: விருப்பப் பெயர்

Gender dysphoria: பாலின முரண்பாட்டு மனஉளைச்சல்

Gender incongruence – பாலின முரண்பாடு

Ally

Cis, Cisgender: சிஸ், ஆதிக்க பாலினம்  

Heterosexual(ity), Straight – எதிர்பாலீர்ப்பு, ஆதிக்க பாலீர்ப்பு

Heteronormativity – எதிர்பாலீர்ப்பு வழமை, ஆதிக்க பாலீர்ப்பு வழமை

Ally: ஆதரவாளர், தோழமை

Queer What…?

Queer Coding: குயர் குறியீடு, பால்புது குறியீடு

Queer Baiting: பால்புது வேட்டை, குயர் வேட்டை

LGBTQIA+ Literature, Queer Literature: குயர் இலக்கியம், பால்புது இலக்கியம்

Queer Theory: பால்புது கோட்பாடு

Phobia

Homophobia: ஒருபாலீர்ப்பு வெறுப்பு

Transphobia: திருநர் வெறுப்பு

Biphobia: இருபாலீர்ப்பு வெறுப்பு

Intersexphobia: பன்முக பால்பண்பு வெறுப்பு

Queerphobia: பால்புது வெறுப்பு

 

இங்கே கொடுக்கப்பட்டுள்ள அடையாளங்களைப் பற்றி மேலும் அறிய கீழே உள்ள  LGBTQIA+ ஒரு அறிமுகம் காணொலியை பார்க்கவும். காணொலியில் உள்ள தகவல்கள் LGBTQIA+ ஒரு அறிமுகம் கட்டுரையில் படிக்கக் கிடைக்கும். 

 

Ally sheet – நண்பர்களுக்கு