குயர் குறியீடு மற்றும் குயர் வேட்டை

பால்புது குறியீடு மற்றும் பால்புது வேட்டை

குயர் குறியீடு (பால்புது குறியீடு)

குயர் குறியீடு (பால்புது குறியீடு): ஆங்கிலத்தில் queer coding (குயர் கோடிங்) என்று சொல்லப்படும் ஒரு பதம். ஒரு கதைக்களத்தில் ஓர்பாலீர்ப்பு அல்லது ஈர்பாலீர்ப்பு கொண்ட நபர்களை, அவர்கள் உறவுகளை, மற்றும் திருநர்களை குறிப்பது போல கதாபாத்திரங்கள் வெளிப்படையாக வடிவமைக்கப்படாமல் குறியீடாக இருப்பது ஆகும். பால்புது குறியீடு ஆரோக்கியமான சித்தரிப்பாகவோ அல்லது எதிர்மறையான சித்தரிப்பாகவோ இருக்கலாம்.


குயர்வேட்டை (பால்புது வேட்டை)

குயர்வேட்டை (பால்புது வேட்டை): ஆங்கிலத்தில் queerbaiting (குயர்பெய்ட்டிங்) என்று சொல்லப்படும் ஒரு கருத்து. ஒரு கதைக் களத்தில் ஓர்பாலீர்ப்பு அல்லது ஈர்பாலீர்ப்பு கொண்டவர்கள் மற்றும திருநர் கதாபாத்திரத்தை வலிய வடிவமைத்தல். இந்த கதாபாத்திரங்கள் கதைக்கு தேவை இல்லாமலோ, ஒரு திருப்புமுனைக்கோ, அல்லது கேலி செய்வதற்க்கோ வடிவமைக்கப்படுத்தல் ஆகும். திரைப்படம் மற்றும் இலக்கியத்தில் திடமான பால்புதுமையினர் பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு கட்டத்தில், இம்மாதிரியான பாத்திரங்களை வடிவமைத்தல் LGBTQ சமுதாய மக்களிடம் இப்படைப்புகளை பால்புதுமையினர் இலக்கியம் / திரைப்படமாக விற்பதும் கவர்வதும் குயர்வேட்டையாகும். இதுபோன்ற தவறான வடிவமைத்தல் LGBTQ மக்கள் மீது வெறுப்பு உமிழ்வதற்கும் உபயகோகப்படுத்தப் படுகிறது.

இந்த பதிவை ஆங்கிலத்தில் படிக்க…