கவிதை — எது எங்கள் உலகம்… — அழகு ஜெகன்

விஜய் வரதராஜின் பல்லு படாம பத்துக்க படத்தின் ஒருபாலீர்ப்பாளர்கள் மீதான வெறுப்பை (homophobia) எதிர்த்து கவிதை

உங்கள் மலம் நக்கிப் பிழைக்க வேண்டும் ஏனென்றால் நாங்கள் சிறுபான்மை,

உங்கள் அகராதியில் எங்கள் காதலுக்கும் காமம் என்றுதான் பெயர் ஏனென்றால் நாங்கள் சிறுபான்மை,

உங்கள் கேள்விக்கு எல்லாம் நாங்கள் கேவலங்கள் ஏனென்றால் நாங்கள் சிறுபான்மை,

உங்களது தெய்வீக காதல் எங்கள் காதல் சேரக்கூடாத இழிவு ஏனென்றால் நாங்கள் சிறுபான்மை,

உங்கள் அனைத்துக் கேலிகளுக்கும் நாங்களே உவமை ஏனென்றால் நாங்கள் சிறுபான்மை,

நீ விந்துக்கு பிறந்தாய் நாங்கள் சாக்கடைக்கு பிறந்தோம் ஏனென்றால் நாங்கள் சிறுபான்மை,

இன்னும் எத்தனை நாளுக்கு உன்னை போல் நாங்கள் காதலும் காமமும் கொள்ளவில்லை என்பதால், தற்கொலைக்கும் கேலிக்கும் எங்களை ஆட்படுத்த போகிறீர்கள்,

குடும்பங்களிலேயே நாங்கள் விடுதலை அடையாத பொழுது எப்படி உங்களிடம் போராட முடியும்,

செத்து செத்து பிழைக்கும் எங்களை 
நீங்கள் எடுக்கும் திரைப்படங்கள் அணுவணுவாய் கொல்கிறது,

எங்களுக்கான உலகம் எது என்று சொல்லிவிடுங்கள் நிச்சயம் போய்விடுவோம்,

அல்லது இதுதான் எங்கள் உலகம் இங்கேதான் நாங்கள் வாழ வேண்டும் எங்களுக்கான உலகம் வேறு எதுவும் இல்லை என்ற பொழுது பெரும்பான்மையை எரித்துக் கொல்ல சிறிது நேரம் கூட ஆகாது எங்களுக்கு.

இத்திரைப்படத்தை எடுத்த அனைவரும் உங்கள் பெற்றோரிடம் போய்க் கேளுங்கள் பல்லு படாமல் நீங்கள் எப்படி பிறந்தீற்கள் என்று.

~*~*~