விஜய் வரதராஜின் பல்லு படாம பத்துக்க படத்தின் ஒருபாலீர்ப்பாளர்கள் மீதான வெறுப்பு (homophobia)…

கிரீஷ்

2016 — ல Orlando ஒரு gay pub ல 49 பேரை ஒருத்தன் சுட்டுக்கொன்னப்போ ஒரு வீடியோவுல gay characters வச்சு “Orlando boys” அப்டின்னு கிண்டல் பண்ணி வீடியோ போட்டவன் தான் அந்த விஜய் வரதராஜ்.

Anti Hindutva பேசிட்டே sexist and homophobic ஆ எப்டி இருக்கலாம் அப்டிங்குறதுக்கு சிறந்த உதாரணம் தான் அவன்.

அவன் படம் எடுத்தா அது பீ மாதிரி தான் இருக்கும்னு தெரிஞ்சது தான். ஆனா அவன் படம் எடுக்கப்போறான்னதும் அவன் தான் தமிழ்சினிமால இனி பெரிய பிடுங்கின்னு வெக்கமே இல்லாம ஸ்டேட்டஸ் போட்டுட்டு திரிஞ்ச முற்போக்கு பேசுற heterosexual man லாம் உயிரோட இருக்கீங்களா? செத்துட்டீங்களா? Sneak peek release ஆகி பன்னெண்டு மணிநேரம் ஆகுது. உங்க முற்போக்குக் கருத்தை எல்லாம் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்.


கௌதம் ராஜ்

இந்த குப்பை படத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பால்புதுமையினர் சமூக மக்களை இழிவு படுத்தும் வகையில் காட்சிகள் தான் இருக்கு..

காலம் காலமாக பாலியல் ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் இப்பதான் சட்டரீதியான சில விடுதலைகள் கிடைத்து.. கொஞ்சம் கொஞ்சமாக தங்களை இப்பதான் வெளியே அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள்…இப்பவந்து இந்தமாதிரி பால்புதுமையினர் பற்றி ஒரு புரிதலும் இல்லாம இப்படி ஒரு காட்சிய வெச்சு இருக்காங்க…

தமிழ் சினிமா பாலபுதுமையினர் மக்களை இப்பவரைக்கும் வில்லன் இல்லன்னா சைக்கோவாத்தான் காமிச்சுருக்கு ‌‌…

உங்களுக்கு பால்புதுமையினர் அப்டினா எப்பவும் பெண் போன்ற நடை,உடை, பேச்சு கொண்ட Sex Thoughts இப்படித்தான் தெரியுமா…

இந்த இடத்தில அவங்கள மட்டும் நீ அசிங்கமா காமிக்கில…. பெண்களையும் தான் அசிங்கமா காமிச்சுஇருக்காங்க..

இந்த பட Trailer கூட பெண் உடல் Sexist Material ah Sarcastic பன்னிருப்பானுக…

பெண் உடல் பாகங்களை சிலாகித்து காமெடி பன்ற அளவுக்கு தான் இவருக்கு முற்போக்கு அறிவு இருக்கு(அப்படின்னு அவருக்கு சொம்பு தூக்கும் முற்போக்காளர்கள் தான் சொல்றாங்க அவரு சொல்ல வில்லை)..

இதுல Highlight என்ன அப்படின்னா இந்த அசிங்கத்தை நம்ம முற்போக்கு பேசக்கூடியவர்கள் வெகுசிறப்பாக கொண்டாடி சிலாகித்துட்டு இருக்கானுங்க… ஏன்டா உங்களுக்கு கொஞ்சம் கூட எங்கேயும் அசிங்கமா இல்ல..

இந்த படத்தை கொண்டாடுகிறவர்கள் Homophobic,Misogynist,பாலின புரிதல் இல்லாத அரைவேக்காடுகள்..


ரகுநாத்

Common Sense அதாவது இயல்பான ஒரு அறிவுன்னு சொல்லறோம்ல, அதன் சிந்தனையில கூட ஒருத்தன், எப்படிடா ரத்தம் கொடுத்தவனின் இயல்புகள், ரத்தம் ஏற்றுக்கொண்டவனுக்கு வரும் என கேட்பது பொது தர்கம், கலை என எடுத்துக் கொண்டால், புனைவாக தர்கத்தை மாற்றி அந்த கலையின் வழி, இயல்பறிவுடன் சமூக நிலைகளை கேள்வி எழுப்பலாம்.

ஆனால் அந்த கலையில் முற்போக்காக, நகைச்சுவையாக வெளிப்படுத்துகிறோம் என சுயதம்பட்டத்துடன், அதற்க்கு முரணாக அனைத்து பிற்போக்கு தனத்துடன் தான் விஜய் வரதராஜ், ஷா-ரா டெம்பில் மங்கிஸ் குழு இயங்குகிறது, ஆரம்ப காலங்களில் பார்பன, பாஜக வை கேள்வி எழுப்பும் satrire களை எடுத்த போது, promising ஆக தெரிந்தது தான் அனைவருக்கும், ஆனால் சாதிய பார்வை, பெண் — பெண்ணுரிமை பார்வை, ஓர்பால் ஈர்ப்புடைவர்கள் மீதான பார்வை என அனைத்திலும், அரைவேக்காடாக எந்த sensibility இல்லாமல், வெறுப்புணர்வுடன் தான் வந்துக் கொண்டிருக்கின்றன அவர்களது காணொளிகள், phobic in all ways.

Bloody Baskar என்னும் வீடியோவில், சாதியத்துடன் இருக்கும் வன்னியர் பாத்திரத்துக்கு (விஜய் வரதராஜே நடித்திருப்பார்) ரத்தம் தேவை — அதற்காக அம்பேத்கர் நகர் (!) லிருந்து வந்த ஒருவரிடம் இருந்து பெற்ற ரத்த தானத்தில், இவர் வடசென்னை மொழியிலும், பீப் சாப்பிடுவராகவும் மாறியிடுவார், சாதிய, இனவாத மனநிலையில் வெளிப்பாடு தான் இது

இப்பொழுது adult comedy என்கிற வகையில், பல்லு படாம பாத்துக்கோ -ன்னு திரைப்படம் செய்திருக்கிறார், அதன் முன்னோட்டங்களும், சில காட்சிகளும் Youtube-ல், வந்துள்ளன அந்த Sneak peak பார்த்தேன், முழுக்க முழுக்க homophobic and sexist ஆக உள்ள காட்சிகள் அவை, அதற்க்கு வந்த பின்னுட்டங்கள படிச்சேன், எப்பவுமே வெகுஜன மத்தியல இருக்கிற ஓர்பால் மற்றும் பெண் வெறுப்பு மனநிலைக்கு (homophobic and misogynist) நன்றாக வலு சேர்பது போன்று தான் இருக்கிறது இந்த காட்சி எல்லாம்.

திரெளபதி படம், அதுக்கான ஆதரவு என்பது, எவ்வாறு வெகுஜன சாதிய மக்களிடத்தில் பெண்கள், இந்த ஆணதிக்க சமூகத்தின் உடைமை என்னும் மனநிலைக்கு leverage தருதோ, அதே ஒத்த படங்கள் தான் adult comedy என phobic ஆக இருக்கும் முற்போக்கு சாயம் கொண்ட குழுவின் படைப்புகளான இப்படங்கள், இந்த நிலையில் ஊருக்கே virtue signal தருபவர்கள் அறிவுடைய, sensibility உடைய குழு என்றெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்!


~*~*~