சொல்லமுயன்றது
நீ தனித்திருக்கும் ஒரு மழைநாளிலோ..
ஒரு பின்னிரவு மின்வெட்டு வேளையிலோ..
முழுவெயிலில்,
நிழல் ஒன்றை தேடி நீ அமரும்
ஒரு கணத்திலோ..
ஒரு எதிர்பாரா துரோகத்திற்கு பிற்பாடோ..
ஒரு மரணம் நிகழ்ந்த மதியமோ..
ஒரு தேற்றலில்லாத
பெரும் அழுகைக்குப்பின்னான அமைதியிலோ..
இல்லை..
இது எதுவுமற்ற மற்றுமொரு சாதாரண நாளிலோ..
நான் என்ன சொல்ல முயன்றேன் என்பது..
உனக்கு கட்டாயம் புரிந்துவிடும்!