யாழ் குயர் விழா (JQF) தனது முதல் விழாவினை சுயாதீனமாக நேரிலும் இணையவழியிலும் நவம்பர் 21- 30 வரையான காலப்பகுதியில் விழா உரைகள், கலந்துரையாடல்கள், கவிதை வாசிப்புகள், பயிற்சிப்பட்டறைகள், காண்பியக் கலைக்காட்சி, திரைப்பட நிகழ்வு போன்ற பல்வகைப்பட்ட அம்சங்களுடன் நிகழ்த்த இருக்கிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். JQF 2021 ஆக்கத்திறன் மற்றும் கலாசாரத் துறைகளில் குயர் சமூகத்தின் சிறப்புத்திறன்களைக்காண்பிப்பதாக இருக்கும்.
கஸ்ரோ பொன்னுத்துரையின் நெறிப்படுத்தலில் சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கைகளுடன் ஆரம்பிக்கப்படும் இவ்விழா, குயர் கலாசாரத் தயாரிப்பு, பரிவர்த்தனை என்பவற்றிற்குத் துணைபுரியும் ஒரு பிராந்தியப் பிரசன்னத்தை இலங்கையின் வடக்கில் கட்டமைப்பதற்கு முயற்சியெடுக்கிறது. கலைஞர், எழுத்தாளர் ஹரி இராஜலெட்சுமியின் எடுத்தாளுகையின் கீழ் உள்ளூர்ப ங்கேற்பு, ஈடுபாடு என்பவற்றை மேம்படுத்தும் நிகழ்வுகளை ஊக்கப்படுத்துவதுடன் உரையாடல், கற்பித்தல், தயாரித்தல், பரிவர்த்தனை செய்தல் என்பவற்றில் தேசிய, சர்வதேசப் பரிமாற்றங்களுக்கான திட்டங்களை ஜே.கு.ஃப்மு ன்னெடுக்கவிருக்கிறது. எழுத்து, இலக்கியம், காண்பியக்கலை, அரங்கு, சினிமா, போன்ற கலாச்சார, பண்பாட்டு வேலைகள்மூலமாக இறுக்கமும் வன்முறை மிக்கதுமான நிலவரங்களை நிலைமாற்றத்துக்கு உள்ளாக்கலாம் என்பது எம்முடைய நம்பிக்கையாகும்.
இப்பிராந்தியத்தின் வெவ்வேறு அமைப்புகளின் அனுசரணை மற்றும் கூட்டாண்மையுடன், குயர் வாழ்வு, அனுபவங்கள், வெளிப்பாடுகள் என்பன பற்றிய முக்கியம் வாய்ந்த உரையாடல்களை இவ்வாண்டில் இவ்விழா முன்வைக்கின்றது. ‘கையிருப்பினை முன்வைத்தல்’, ‘எங்கே இருக்கிறோம் என்பதை அறிதல்’ போன்ற எண்ணக்கருக்கள் இவ்விழாவின்இ வ்வருடத்திற்கான எடுத்தளுகைப் பரப்புகள். அண்மைய சில ஆண்டுகளில் குயர் சார்ந்து நிகழ்த்தப்பட்ட சிறந்த பங்களிப்புகளைக் கொண்டுவருவதனூடே இப்பிராந்தியத்திலே குயர் வெளிப்பாட்டிற்கான காலம், இடம், இயக்கம்/ திசைவழி என்பவற்றிற்கான புரிந்துணர்வை இவ்விழா வழங்கும் என நம்புகிறோம்.
எமது ‘உரைகளும் கலந்துரையாடல்களும்’ நிகழ்ச்சியில் கலைஞர்களும் எழுத்தாளர்களும் ஜே.கு.ஃப் 2021 விழா ஒருங்கிணைப்புக் குழு கல்வியாளர்களும் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்களும் பங்குகொள்கிறார்கள். இசுறு சாமர
சோமவீர, யாழினி ட்ரீம், நாடிகா, ஷோபா சக்தி, வரதாஸ் தியாகராஜா, மௌலி, சுமதி சிவமோகன் ஆகியோர் இந்நிகழ்ச்சியை அணிசெய்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் பெருமிதமடைகிறோம்.
முழுநீளத் திரைப்படங்களின் திரையிடலில் கட்டுமரம் (2018, சுவர்ணவேல் ஈஸ்வரன்), ஃபிராஞ்ஜிபனி (விசாகேச சந்திரசேகரம், 2014), ரூபா (2018, லெனின் எம் சிவம்) ஆகிய படைப்புகள் திரையேறுகின்றன. ஆவணப்படங்களின் திரையிடலில் பிரசன்னா ராமஸ்வாமி, லீனா மணிமேகலை, மாலினி ஜீவரட்னம், க்ரசன்ட் டையமன்ட் ஆகியோரின் படைப்புகள் நீங்கள் காண்பதற்காய் காத்திருக்கின்றன. இவற்றையும் தாண்டி, டிலோ கிட், யாழினி ட்ரீம், ஜீவா பார்த்திபன் ஆகியோரின் கலைஞர் காணொளிகளும் திரையிடப்படவுள்ளன. எமது உள்ளூர் இயக்குநர் குறிப்பு உரையாடல் நிகழ்ச்சியில், ஈழநிலா, பிறைநிலா கிருஷ்ணராஜா ஆகியோரது படைப்புகள் கவனம் பெறவுள்ளன.
காண்பியக் கலைகளின் கண்காட்சியில், கஜேந்திரன் சிவசுப்பிரமணியம், கிருஷ்ணப்பிரியா தபேந்திரன் ஆகிய கலைஞர்களது இரு கலைப்படைப்புகள் களம்பெறுகின்றன. இப்படைப்புகள், ஏஞ்சல் குயீன்டஸ் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட Queer/Trans Collaborations 2021 படிப்புவட்டத்தில் அக்கலைஞர்களின் பங்களிப்பின் ஒரு பகுதியாக அமைகின்றன. கண்காட்சியானது, 2021க்கான எமது நிகழ்விடப் பங்காளிகளான ‘கலம்’ பண்பாடுகளின் சந்திப்பு வெளியில் நிகழும். அங்கே ஆற்றுகைகளும் ஆற்றுப்படுத்தப்பட்ட கண்காட்சிச் சுற்றுலாக்களும் இடம்பெறும்.
வடிவமைப்பு, வெளியீடு, விநியோகம், விற்பனை முதல் ஆவணப்படுத்தல் வரை, அந்நிலப்பரப்பிலிருந்தான பங்குதாரர்களின்ஆ தரவுடன் JQF 2021 வழங்கப்படுகின்றது. இந்த அனுசரணைகளிடமிருந்து எமக்குக் கிடைக்கும் ஆதரவானது, எமது செயலாற்றலை மேலும் ஊக்குவிப்பதுடன் மட்டுமன்றி, முற்போக்கான கலாச்சாரம் மற்றும் பண்படுகளை கூட்டிணைந்து உருவாக்குவதற்கான புதிய கதவுகளையும் திறந்து வைக்கிறது. குயர் வாழ்வு, அதன் சாத்தியங்கள் மற்றும் சுதந்திரங்களை உருவாக்கித்தரும் ஒரு திசையை நோக்கி இந்த அனுசரணைகளையும் கூட்டிணைவுகளையும் வளர்த்தெடுக்க ஜே.கு.ஃப் ஆவலுடன் இருக்கிறது. இவ்வகையில் வெண்பா நூல்நிலையம், AZE ஐ.டி கன்ஸல்டன்ஸி, FoldMedia Collective, கலம், வடலி பதிப்பகம், தாய்வீடு பத்திரிகை, புதியசொல் மாத இதழ், குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ், மற்றும் நூலகம்
மைப்பு ஆகியோருக்கு எம் மனமார்ந்த நன்றிகள். செயல்வாதத்திற்கான நீண்ட வரலாற்றினைக் கொண்ட சமூகங்கள் மற்றும் நண்பர்களினதும் அன்பான ஆதரவுடனும் கூட்டொருமையுடனும் JQF 2021 சாத்தியமாக்கப்படுகின்றது. உங்கள் ஒவ்வொருவரதும் துணிச்சலான, கடின உழைப்புகள் இல்லாமல் போனால் இத்தருணம் சாத்தியமாகியிருக்கப் போவது இல்லை. சமூக வலைத்தளங்களில் எமது அறிவித்தல்களையும் இற்றைப்படுத்தப்படும் புதிய தகவல்களையும் தொடர்வதன் மூலம் எமக்கு ஆதரவளிக்க முடியும். @jaffnaqfest எனும் பயனர் பெயர் மூலம் ஃபேஸ்புக், இன்ஸ்ரகிராம், ருவிற்றர் ஆகிய தளங்களில் எம்மைக் அணுக முடியும். எமது இணையத்தளம் www.jaffnaqueerfestival.com.