உலகளாவிய பால்புது சுயமரியாதை நிகழ்வு 2020

COVID-19 தொற்றுநோயால் ரத்து செய்யப்பட்ட அல்லது ஒத்திவைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பால்புது சுயமரியாதை கொண்டாட்டங்களுக்கு மாற்றாக, உலகெங்கிலும் உள்ள Pride அமைப்புகளும் பால்புது நபர்களுக்காக இயங்கும் அமைப்புகளும் இணைந்து 2020 ஜூன் 27 சனிக்கிழமையன்று ‘குளோபல் பிரைட்’ நிகழ்வை (Global Pride, உலகளாவிய பால்புது சுயமரியாதை நிகழ்வு) ஏற்பாடு செய்துள்ளன.

உலகில் எங்கிருந்தாலும் எல்லோரும் பங்கேற்கக்கூடிய ஒரு நிகழ்வை  குளோபல் பிரைட் இணையதளங்களைப் பயன்படுத்தி வழங்குகிறது. இதில் இசை நிகழ்ச்சிகள், உரைகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் முக்கியச் செய்திகள் ஆகியவை இடம்பெறும். நிகழ்வு  நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும், மேலும் நாம் வீட்டிலிருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

இன்டர் பிரைட் மற்றும் ஈரோப்பியன் பிரைட் ஆர்கனைசர்ஸ் அசோசியேஷன் (InterPride and the European Pride Organisers Association), உலகில் மிகப்பெரிய சர்வதேச பால்புது சுயமரியாதை இயக்கங்கள் – கனடா, ஜெர்மனி, ஸ்வீடன், UK, USA ஆகிய நாடுகளின் தேசிய இயக்கங்களோடும், தெற்கு ஆப்பிரிக்கா, ஆசியா, ஓசேனியா நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் இருக்கும் பிராந்திய இயக்கங்களோடும் இணைந்து, குயர் சமூகங்களையும் பால்புது சுயமரியாதை இயக்கங்களையும் ‘உலகளாவிய பால்புது சுயமரியாதை நிகழ்வில்’ ஒன்று சேர்க்க வேலை செய்கிறது.

இந்தியாவிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புகள், குழுக்கள் மற்றும் தனி நபர்கள் இதில் பங்கு பெறுகின்றனர். தமிழகத்திலிருந்து குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் மற்றும் மகிழ்வன் அமைப்புகள் இந்த நிகழ்வில் பங்கு கொள்கின்றன. குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸின் “நாம் நாமாக இருப்போம்” காணொலி இதில் திரையிடப்படுகிறது.

நிகழ்வின் அட்டவணையை இங்கே காணலாம்.