2019-ம் வருடத்துக்கான சென்னை குயர் இலக்கியவிழா செப்டம்பர் 14-ம் தேதி கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. குயர் சென்னை கிரானிக்கள்ஸ் 2018-ம் ஆண்டு இந்தியாவில் முதல் முறையாக குயர் இலக்கிய விழாவை நடத்தியது. இவ்விலக்கிய விழா 2018இல் ஜூலை 7ஆம் தேதி கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.
இவ்வருட நிகழ்வில் அனைவருக்குமான குழந்தைகள் இலக்கியம் எனும் தலைப்பில் ஷால்ஸ் மஹாஜன் மற்றும் சாலை செல்வம் உரையாற்றினர். பால்புது இலக்கியத்தில் ஓவியம் எனும் அமர்வில் வை மற்றும் மாரி உரையாற்றினர். எழுத்தாளர் வ கீதா பால்புது இலக்கியங்களில் மொழிபெயர்ப்பு குறித்து பேசினார். மேலும் பால்புது இலக்கியம் குறித்து ஹரி இராஜலட்சுமியும், மலையாள பால்புது இலக்கியம் குறித்து கிஷோர் குமாரும் உரை நிகழ்த்தினர். இம்முழுநாள் நிகழ்வும் தென்சென்னைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் முன்னுரையோடு தொடங்கியது.
இம்முழுநாள் நிகழ்வுகளின் வீடியோக்களை குயர் சென்னை கிரானிக்கள்சின் யூடியூப் சேனலில் காண முடியும். ஒலி வடிவத்தில் போட்காஸ்டிலும் கேட்கமுடியும்.
மேலிம் விவரங்களுக்கு: QueerLitFest.com
~*~*~