ஏ-ரொமான்டிக் (aromantic) விழிப்புணர்வு வாரம்

ஏ-ரொமான்டிக் (aromantic) விழிப்புணர்வு வாரம், காதலர் தினம் கொண்டாடப்படும் February 14-க்கு அடுத்து வரும் வாரத்தில் அனுசரிக்கப்படுகிறது.

எவரின் மீதும் காதல்சார் ஈர்ப்பு குறைவாக ஏற்படும் அல்லது எதுவுமே ஏற்படாத பாலியல்பின் பெயரே ஏரொமாண்டிஸம். கலவிசார் பாலீர்ப்பற்றத் தன்மையும் (asexuality), காதல்சார் ஈர்ப்பற்றத் தன்மையும் (aromanticism) வெவ்வேறானவை. இவ்விரண்டும் ஒருங்கே ஒருவரிடமே இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமல்ல.

இயல்பான வாழ்விற்கு காதல்-சார் ஈர்ப்பும், அதன்மூலமாகப் பெறக்கூடிய ஒற்றைத் துணையோடு வாழக்கூடிய உறவுமே (monogamy) அடித்தளம் எனவும், இதுவே அனைவருக்கும் விருப்பமான வாழ்க்கை முறை எனவும் இயங்கிவரும் amatonormativity என்கிற சமூக-பண்பாட்டு விழுமியத்தை கேள்விக்கு உட்படுத்துவது ஏரோ ஸ்பெக்ட்ரம் செயல்பாட்டின் முக்கிய இலக்காகும்.