பால்புதுமையினர் உரிமைகள், உறுப்பினர் மசோதாக்கள் மற்றும் பன்முகத்தன்மை குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார்

ஏப்ரல் 1ம் தேதி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார் அவர்கள்,  பால்புதுமையினருக்கான (LGBTQIA+) சம உரிமைக் கோரி லோக்சபாவில் ஒரு தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார். தத்து எடுப்பது, பாதுகாவலர்கள், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது ஆகியவற்றுக்கான உரிமை, பால்புதுமையினர் குழுக்களைக் குடும்பங்களாக அங்கீகரிப்பது, திருமணத்துக்கான உரிமை, பிள்ளைப்பேறு நன்மை, ராணுவத்தில் சேவை செய்வதற்கான உரிமை, துன்புறுத்தல், கேலிசெய்தல் மற்றும் வேற்றுமையோடு நடத்தப்படுவதிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட 12 உரிமைகள் பால்புதுமையினருக்குத் தரப்படவேண்டும் என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள், பால்புதுமையினரிடம் வேற்றுமை பாராட்டவேண்டாம் என்றும் அவர்களது உரிமைகளை நிலைநிறுத்துமாறும் அரசுகளுக்கும் அரசுசார் அமைப்புகளுக்கும் பல பரிந்துரைகளை வழங்கியிருந்த நிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியதற்கான காரணம் குறித்தும் அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடுகளின் அரசியல் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாருடன் தி நியூஸ் மினிட் சார்பாகப் கீதிகா மந்த்ரி ஒரு உரையாடலை நிகழ்த்தினார். அதிலிருந்து,

பால்புதுமையினர் (LGBTQIA+) உரிமைக்காகநீங்கள்சமீபத்தில்ஒருதனிநபர்மசோதாவைஅறிமுகம்செய்திருக்கிறீர்கள்? இதைநோக்கியபயணம்எப்படிநிகழ்ந்தது? இதுபற்றிநீங்கள்முன்பிருந்தேபணியாற்றிவருகிறீர்களா?

பால்புதுமையினரின் (LGBTQIA+) உரிமைகளை நிலைநாட்டவேண்டும் என்று நீதிமன்றங்கள் வலியுறுத்தியபோது இதை செய்வதற்கான தேவை இருப்பதாகத் தோன்றியது. அதன்பிறகு, நாமே ஒரு முன்னெடுப்பை செய்தால், அது ஒரு விவாதப்பொருளாகி, பால்புதுமையினரை மைய நீரோட்டத்தில் இணைப்பதற்கான வாய்ப்பாக அமையுமே என்று நினைத்தேன். இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபிறகு, பால்புது சமூகத்தைச் சேர்ந்த பலரும் என்னைத் தொடர்பு கொண்டு தங்களது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டனர். மசோதா முன்னெடுப்பைப் பாராட்டியதோடல்லாமல், நாடாளுமன்றத்தில் தங்களது உரிமைகள் பேசப்படுவது குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்தனர். தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே அவர்களும் தன்பாலீர்ப்பாளர்களின் திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிக்கும் ஒரு மசோதாவை அதே நாளில் அறிமுகப்படுத்தினார். என்னிடம் பேசிய பால்புதுமையினர், தங்களது பிரச்சனைகள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விவாதிக்கப்படுவது ஊக்கமளிக்கிறது என்றும், தங்களுக்கான சம உரிமை மற்றும் மரியாதை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறினர்.

திராவிடமுன்னேற்றக்கழகத்தில்பால்புதுமையினரையும்உள்ளடக்கியசெயல்பாடுகளுக்கானநகர்வுபற்றிக்கூறமுடியுமா? அதுதிராவிடஅரசியலுடன்எவ்வாறுபிணைக்கப்பட்டிருக்கிறது?

திராவிட அரசியல் என்பது எப்போதுமே ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் குரல்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்திருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்கள், விளிம்புநிலையில் வாழ்பவர்கள் ஆகியோரின் பிரச்சனைகளைப் பேசுவதில் தயக்கமே இருந்ததில்லை. இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக நான் கட்சியினரிடம் விவாதிக்கவில்லை, என்னுடைய சொந்த விருப்பத்தின் பெயரிலேயே இதை செய்தேன். ஆனால் கட்சிக்குள் எந்த முரண்முரண்பாட்டிற்கான வாய்ப்பும் இல்லை.  எப்போதுமே எங்களை ஒரு முற்போக்கான கட்சியாகப் பார்க்கிறோம். கட்சியின் பெயரிலேயே “முன்னேற்றம்” என்ற சொல் இருப்பதால் கட்சியிலிருந்து எதிர்ப்பு வர எந்தக் காரணமும் இல்லை.  இன்று (ஏப்ரல் 15ம் தேதி) காலை, திருநர்களுடன் முதல்வர் அவர்கள் தன் வீட்டில் காப்பி அருந்தினார். 2015ம் ஆண்டில் எங்களது உறுப்பினர் திருச்சி சிவா, திருநர் உரிமைகளுக்கான தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆகவே இதுபோன்ற பிரச்சனைகளை முன்னிறுத்தி விவாதிப்பது எங்களது கட்சிக்குப் புதிதல்ல.

சமீபத்தில்அமைப்புரீதியானவேறுபாடுகளிலிருந்துபால்புதுமையினரைக்காத்துஉதவும்சிலஉத்தரவுகளைசென்னைஉயர்நீதிமன்றம்பிறப்பித்திருக்கிறது. பால்புதுமைசமூகத்தினரின்உணர்வுகளுக்குமதிப்பளித்துகாவல்துறையினர்நடந்துகொள்வது, ஊடகங்களுக்கானதமிழ்பால்புதுபதங்கள்கொண்டபட்டியல்ஆகியவைஇதில்அடங்கும். தமிழ்நாட்டில்திருநங்கை*நலவாரியமும்உள்ளது. ஆகவேஇங்குபால்புதுமையினரைஉள்ளடக்கியசெயல்பாடுகளின்வரலாறுஒன்றுஏற்கனவேஇருக்கிறது. மற்றமாநிலங்களில்விழிப்புணர்வும்திட்டவரைவுகளும்வருவதற்குத்தாமதமானாலும்இங்குஇவைமுன்பேகொண்டுவரப்பட்டதற்கானகாரணம்என்னஎன்றுநினைக்கிறீர்கள்?

சமீபத்திய தேர்தல்களில் பல திருநர் வேட்பாளர்களை முன்னிறுத்தினோம். காவல்துறையிலும் அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர், மாநில அரசு இதற்கு ஆதரவளித்து வருகிறது. வட மாநிலங்களோடு ஒப்பிடும்போது திருநர்களின் பிரச்சனைகள் இங்கு அதிகம் கவனிக்கப்படுவதற்குக் காரணம், கல்வி காரணமாக தமிழ்நாட்டில் காணப்படும் முற்போக்கு மனநிலையாகத்தான் இருக்கவேண்டும். ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு ஆரம்பப்பள்ளி, மூன்று கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலைப்பள்ளி, ஐந்து அல்லது ஏழு கிலோமீட்டருக்கு ஒரு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் இங்கு காணப்படுகின்றன. இதுவும், திராவிட எண்ணங்கள் மற்றும் கொள்கைகள் இங்கு வேரூன்றி இருப்பதும் முக்கியக் காரணங்கள். தொடக்கத்திலிருந்தே பெரியார் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் சமூக நீதிக்காகவும் பாடுபட்டார். இதுபோன்ற காரணங்களால் விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகள் இங்கு தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன.

கல்விமுக்கியமானது, ஆனால்அதுமட்டுமேசமூகமரபுசார்புரிந்துணர்வுக்குக்காரணமாகஅமையாதுஎன்பதையும்பார்த்திருக்கிறோம். தமிழ்நாட்டிலும்பெண்களுக்கும்பாலினசிறுபான்மையினருக்கும்எதிரான, பின்தொடர்தல்போன்றகுற்றங்கள்பலவும்நடக்கின்றன. எல்லாபாலினத்தைச் சார்ந்தவர்களையும்உள்ளடக்கும்செயல்பாட்டைமுழுமையாகக்கொண்டுவரஎன்னசெய்யவேண்டும்?

என்ன செய்ய வேண்டும் என்றால் இந்த உள்ளடக்கத்தை அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்த்து, ஒரு சட்டமாக்கி, மக்களிடம் “உங்கள் உரிமைக்காக நீங்கள் போராடுவதற்கான அடிப்படையை இந்த சட்டம் வழங்கும்” என்று உறுதியளிக்கவேண்டும். இவை குழப்பமான நிலைப்பாடாக இருக்கும்போதோ சட்டமாக இல்லாதபோதோ ஒரு காவல்துறை அதிகாரியைப் போல, அதிகார மையத்தில் இருப்பவர்களின் தனிநபர் செயல்பாடுகள் மற்றும் முடிவுகளைப் பொறுத்து மாறுபட வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக காவல்துறையினரைப் பொறுத்தவரை உரிமைகள் மீறப்படும்போதோ பாலின வேறுபாடு சார்ந்த பிரச்சினைகளின்போதோ அவை எப்படிக் கையாளப்படவேண்டும் என்பதற்கான நெறிப்படுத்தப்பட்ட செயல்முறைகள் வேண்டும். ஆங்காங்கே சில பாகுபாடுகள் இருக்கலாம், ஆனால் ஒரு சட்டம் இயற்றப்படுமபோது அதை மதித்து செயல்படவேண்டும் என்கிற சூழ்நிலையை உருவாக்கலாம். பால்புதுமையினரை மைய நீரோட்டத்தில் இணைக்கவும் எல்லாரையும் போலவே அவர்களுக்கு உரிமைகள் வழங்கும் சூழலை உறுதிப்படுத்தவும் இதுதான் வழி.

1952ம்ஆண்டுதொடங்கிஇன்றுவரைநாடாளுமன்றத்தில் 14 தனிநபர்மசோதாக்கள்மட்டுமேநிறைவேற்றப்பட்டுள்ளன. அப்படியானால்இந்ததனிநபர்மசோதாக்கள்வழக்கமாகஇல்லாமல்விதிவிலக்குகளாகவேஇருந்துவருகின்றன. இந்தசூழலில்உங்களதுமசோதாவைநிறைவேற்றுவதற்கானதிட்டம்என்ன?

2015ல் திருச்சி சிவாவின் மசோதா ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டபின்னர் அது லோக் சபாவுக்கு அனுப்பப்பட்டது. (ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினரிடம் மசோதாவைப் பரிந்துரைக்குமாறு அவர் வைத்த கோரிக்கை தோல்வியுற்றது). பிறகு அதை அடிப்படையாக வைத்து ஒன்றிய அரசு திருநர் (உரிமை பாதுகாப்பு) சட்டத்தை இயற்றியது. இது திருநர் சமூகத்தினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அரைமனதான, பிற்போக்குத்தன்மை கொண்ட மசோதா இது என திருச்சி சிவாவும் சட்டத்தை விமர்சித்தார். 

செயல்படாமலேயே நின்றுவிடாமல் ஒரு செயல்பாட்டைத் தொடங்கி வைப்பதற்காக இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். மக்கள் இதுகுறித்துப் பேசுவார்கள், விவாதங்கள் எழலாம், குழுக்கள் தங்களுக்கான உரிமைகளைக் கோருவார்கள். தனிநபர் மசோதாக்கள் பொதுவாக நிறைவேற்றப்படுவதில்லை என்பதால் அவற்றில் பயனில்லை என்பதற்கு பதிலாக, ஒரு தொடக்கப்புள்ளியாகவே இவற்றைப் பார்க்கவேண்டும்.

இப்போது இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். எதிர்காலத்தில் இதுபற்றிய விவாதம் வரும்போதெல்லாம் நான் அதுபற்றிப் பேச முடியும். பூஜ்ஜிய நேரத்தின்போது இந்தப் பிரச்சனையைப் பற்றிய விவாதத்தை முன்னெடுக்கலாம். இதுபோன்ற பிரச்சனைகளைப் பற்றித் தொடர்ந்து குரல் எழுப்புவதற்கான வாய்ப்புகள் வேண்டும். ஒருமுறை பேசினால் ஐந்து பேர் கேட்பார்கள் என்று வைத்துக்கொள்வோம், இரண்டாவது முறை பேசும்போது இன்னும் அதிகம் பேர் கேட்பார்கள். சுப்ரியா சுலேவின் மசோதா உட்பட இதுபற்றி இரண்டு மசோதாக்கள் ஏற்கனவே இருக்கின்றன. இதற்காக பிற நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் திரட்ட முடியும். ஒரு அம்சம் விவாதத்துக்கு வரும்போதுதான் அதுபற்றிய உறுப்பினர்களின் நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ள முடியும். இது நேரம் எடுக்கலாம், நாளையோ நாளை மறுநாளோ இந்த மசோதா அமலுக்கு வந்துவிடாது, ஆனால் காலப்போக்கில் எங்களுடைய முன்னெடுப்பு ஒரு நல்ல இலக்கை சென்று அடையும்.

அடுத்தடுத்துநாடாளுமன்றத்தில்நீங்கள்விவாதிக்கவிரும்புகிற, உங்களுக்கும்உங்களதுதொகுதியைச்சேர்ந்தமக்களுக்கும்முக்கியமானபிரச்சனைகள்என்னென்ன? இவற்றில்எந்தபிரச்சனைகளுக்கானதீர்வுகளைநோக்கிஏற்கனவேபணிபுரியத்தொடங்கியிருக்கிறீர்கள்?

எப்போதுமே ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் எழுப்பத்தான் முயற்சி செய்கிறேன். உதாரணமாக, சமீபத்தில் லம்பாடி சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காகக் குரல் கொடுத்தேன். என்னுடைய முதல் தனிநபர் மசோதா என்பது, ஏற்கனவே தமிழ்நாட்டில் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட சுயமரியாதைத் திருமணங்களையும் இந்து திருமண சட்டத்தில் சேர்ப்பதற்கான சட்டத் திருத்தத்தைப் பற்றியது. 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வாயு சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் விற்கப்படுவதைத் தடை செய்வதற்காகவும் குரல் கொடுத்தேன். குழந்தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமை முறையை எதிர்த்தும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறேன். சர்வதேச நீதி மிஷன் கூட்டமைப்புடன் (International Justice Mission) இதுசார்ந்த பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். என்னுடைய தொகுதி மக்களுக்காக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணிபுரிகிறேன்.

நீங்கள், நாடாளுமன்றஉறுப்பினர்கனிமொழிபோன்றவர்கள், தொடர்ந்துதென்னிந்தியாவின்பன்முகத்தன்மைகுறித்துபாராளுமன்றத்தில்உறுதியுடன்பேசிவருகிறீர்கள். இந்திதான்இணைப்புமொழிஎன்பதுபோன்றஅறிக்கைகளுக்குமத்தியில், பன்முகத்தன்மையைமீண்டும்மீண்டும்பேசிவலியுறுத்துவதுஎத்தனைமுக்கியமானது?

கடந்த மூன்று ஆண்டுகளாக டெல்லியில் இருக்கிறேன், ஆனால் இந்தி கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஒரு கட்டாயத்தை நான் உணர்ந்ததில்லை. தமிழ் வழியில் படித்த பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள், உத்தரப்பிரதேசம் மற்றும் பிற இந்தி பேசும் மாநிலங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள். அங்கு போய் அவர்கள் இந்தியில் பேசவும் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். இதேபோல, வட இந்தியாவைச் குடியியல் பணி அதிகாரிகள் தமிழ்நாட்டிலோ வேறு தென்னிந்திய மாநிலங்களிலோ பணியமர்த்தப்படும்போது இங்கு உள்ள மொழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள். அவசியம் இருக்கும்போது அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்பதை விளக்கவே இதைக் கூறுகிறேன். தேவை இருக்கும்போதோ விருப்பம் இருக்கும்போதோ மக்கள் மொழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள். ஏன் ஒரு மொழியைத் திணிக்கவேண்டும்? ஒரு விஷயத்தை மட்டும் எல்லா மக்கள் மீதும் திணிப்பதால் என்ன நன்மை வந்துவிடும்?

பன்முகத்தன்மையைப் பொறுத்தவரை, இந்தியாவில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு சென்றால் உணவு, மரபு, மொழி எல்லாமே மாறிவிடுகின்றன. அதுதான் நம்முடைய ஜனநாயகத்தின் பெரிய பலம். ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்கள் என்கிறார், மனுஸ்ம்ருதியை அடிப்படையாக வைத்தே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இருக்கவேண்டும் என்கிறார். இதை நோக்கிததான் நாடு சென்றுகொண்டிருக்கிறது, ஏனென்றால் பாஜகவினர் நன்றாக செயல்படுத்தும் தேர்தல் யுத்தி இது.

ஹிந்து ராஜ்ஜியம் என்ற இந்த யோசனையை திராவிட கொள்கைகள் மூலம் நாம் எதிர்கொள்ளவேண்டும். இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு ஆதரவாக நாம் நிற்கவேண்டும். ஏனென்றால், இன்று அவர்களுக்கு எதிராக இருப்பவர்கள் நாளை உங்களுக்கு எதிராக வரலாம். அப்போது உங்களுக்காகப் போராட யாரும் இருக்க மாட்டார்கள். நமது மரபுகளின் பன்முகத்தன்மையை நாம் போற்றவேண்டும், அதற்காகப் போராடவேண்டும். அதுதான் இந்தியாவின் பலம், அழகும் கூட.

*குறிப்பு: திருநம்பிகள் மற்றும் திருநங்கைகளுக்கான நலவாரியம் ஆங்கிலத்தில Transgender Welfare Board என்றும் தமிழில் திருநங்கை நலவாரியம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்நலவாரியத்தின் பெயரை திருநர்கள் நலவாரியம் என மாற்றியமைக்க வேண்டும் என்பது திருநர் சமுதாய மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
The News Minute உறுப்பினர்கள் செய்திமடலில் முதலில் வெளியிடப்பட்டது. சுயாதீன ஊடக நிறுவனமான தி நியூஸ் மினிட்டை ஆதரிக்க: https://www.thenewsminute.com/supportus