நாம் நாமாக இருப்போம்

Be Strong, Be Safe, Be Proud

ஹாய்…நாங்க சில விஷயங்களை உங்ககிட்ட பேச வந்துருக்கோம்

நமக்கு தெரியும், நாம எல்லாருமே லாக்டவுன்னால வீடுகளுக்குள்ள அடைபட்டிருக்கோம்

நமக்கு, நம்மோட பாதுகாப்புக்கு, கோவிட் 19 பரவாம இருக்குறதுக்கு இந்த லாக்டவுன் ரொம்ப அவசியமானது.

நாம யாருமே எதிர்பார்க்காத ஒரு சமயத்துல வந்த இந்த லாக்டவுன்னால,

நீங்க பதட்டமாயிருந்தா, பயந்துபோயிருந்தா, கோபமா இருந்தா, இல்ல பாதுகாப்பில்லாம உணர்ந்தா உங்களுக்கு நாங்க சொல்ல நினைக்குறது, “இப்போ நீங்க தனியா இல்ல”

நிறையபேர் வன்முறைகள் நடக்கக்கூடிய குடும்பங்களுக்கு திரும்பிப் போக வேண்டி வந்திருக்கும்.
எப்போ வெளிய போகமுடியும்னு கூட தெரியாம அங்கயே வாழவேண்டி இருக்கும்.

நிறைய பேருக்கு தங்களோட வேலையை இழந்துடுவமோன்னு பயம் வந்திருக்கும்.

சிலர் ஏற்கனவே வேலைகளை இழந்திருப்போம்.

இதோட சேர்த்து, நமக்கு ஆதரவா இருக்குறவங்களோட தொடர்புகளை இழந்திருப்போம்.

நமக்கு பாதுகாப்பா இருந்த இடங்களை இழந்திருப்போம்.
நம்மோட அடையாளங்களை, நம்மோட பாலீர்ப்பை, நம்மோட பாலினத்தை மறைச்சு வாழுற நிலைக்கு நிறையபேர் தள்ளப்பட்டிருப்போம்.

நிறையபேருக்கு ஹார்மோன் உட்பட உயிர்காக்குற மருந்துகள் எடுக்கமுடியாம போயிருக்கும், உடலளவுலேயும் மனசளவிலேயும் பாதிக்கப்பட்டிருப்போம். மன அழுத்தத்துக்கு ஆளாகியிருப்போம்.

ஆனா, இது எதுவும் நமக்கு புதுசில்லன்னு நமக்கு நல்லாவே தெரியும்…

எதிலயோ மாட்டிக்கிட்டு இருக்குறதோட வலி, பாதுகாப்பில்லாம உணர்றதோட வலி…எதுவுமே நமக்கு புதிசில்ல…

ஆனா இந்தமுறை நாம எங்கயும் நகரமுடியாத நிலையில இருக்கோம். தனியா இருக்கோம். தனிமைப்படுத்தப்பட்டு இருக்கோம்.

இந்த நேரத்துல நாங்க உங்களுக்கு சொல்ல நினைக்குறது. நாம இதுக்கு முன்னாடி தனிமையிலயோ, தனிமைப்படுத்தப்பட்டோ இருந்தபோது கூட அதில இருந்து வெளிய வந்துருக்கோம்.

நம்மால எதிர்கொள்ளவே முடியாதுங்குற அளவுக்கு பிரச்சினைகளை சமாளிச்சு இருக்கோம்.

வாழ்ந்திருக்கோம். இப்போ வாழ்ந்துகிட்டிருக்கோம்.

அடுத்தடுத்து வளந்துக்கிட்டிருக்கோம்.
இப்போ நாங்க சொல்ல நினைக்குறதெல்லாம்,
 நம்பிக்கையா இருங்க. தைரியமா இருங்க. நம்மால இந்த சூழ்நிலையை கடந்து போக முடியும்.

இந்த கடினமான நேரத்தை நாம எப்டி கடந்தோன்னு ஒரு கதையா நம்மால பின்னாடி சொல்ல முடியும்.

Be strong. Be safe. Be Proud

நாம் நாமாக இருப்போம்.

~*~*~

Read in English.