தொழிலாளர் தினம் 2020

இந்தியாவில் பால்புதுமையினராக (LGBTQIA+) அடையாளப்படுத்திக் கொள்ளும் தொழிலாளர்களின் உரிமைகளும் பிரதிநிதித்துவமும் மறைக்கப்படுகின்றன. இன்றளவும் பால்புதுமையினரை, குறிப்பாக பணியிட வன்முறைகள் மற்றும் சுரண்டல்களிலிருந்து பாதுகாக்க மத்திய மாநில அளவில் எந்த செயல்திட்டமும் உருவாக்கப்படவில்லை. பணியிடங்களில் நிலவும் பாகுபாடு குறித்து நிறைய எழுதப்பட்டிருப்பினும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு உதவும் வகையில் எடுக்கப்படும் ஒருங்கிணைந்த முயற்சிகள் குறைவே.

பல்வேறு தளங்களில் மாற்றங்களை எதிர்நோக்கும் பால்புதுமையினராகிய நாங்கள், இந்த சமூகம் மற்றும் தொழிற்படையின் அனைத்து தளங்களிலும் பால்புதுமையினரின் இருப்பை உறுதிப்படுத்த, பால்புதுமையினர் ஒருங்கிணைந்த தொழிலாளர் போராட்டங்களையும் தொழிற்சங்கங்களையும் முன்னெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிரோம். பால்புதுமையினர் அவரவர் பணியிடங்களில் அங்கீகாரமும் பாதுகாப்பும் கிட்டும் வகையில் பால்புதுமைக்கு உட்பட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் சட்டம் ஒன்றை எதிர்நோக்குகிறோம்.

~*~*~

To read the post in English…