அக்டோபர் 21ம் திகதியிலிருந்து 30ம் திகதி வரைக்குமான 10தினங்கள்.
கடந்த நவம்பரில் முதாலாவது தொடக்கப் பதிப்பைத் தொடர்ந்து வருடாந்த யாழ் குயர் திருவிழாவானது (JQF) இந்த ஆண்டு குயர் சூழலியல் மீதான கவனக் குவிப்புடன் திரும்புகிறது. உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நலவாழ்வு ஆகியன வீழ்ச்சியடைந்து வரும் இலங்கை நிலவரத்தைக் கலை செயற்பாடுகள் மற்றும் சமூக இயக்கத்தூடாக எதிர்கொள்ளும் பரீட்சார்த்த நோக்குடன் ஒழுங்கமைக்கப்படும் இவ்விழா, இயற்கையையும் அதனுடனான நமது உறவையும் விசாரணைக்கு உட்படுத்த அழைக்கிறது.
விழாவுக்காக உருவாக்கப்பட்ட காண்பியக்கலை சிற்பங்கள், நிறுவல்களுடன், பத்து தினங்கள் நீடிக்கும் கலந்துரையாடல் அரங்குகள், திரையிடல்கள், மற்றும் பட்டறைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. நிகழ்நிலையிலும் நேரிலுமாக கலவையாக வழங்கப்பட்ட கடந்த வருட முறைமையிலிருந்து விடுபட்டு முற்றுமுழுதும் நேரடியான பங்கேற்பைக் கோரும் நிகழ்வுகளை இவ்வருட விழா கொண்டிருக்கிறது. பட்டறைகளிலும் செயற்பாடுகளிலும் பங்கேற்போர் இயற்கைப் பொருட்களுடன் ஊடாடும் வாய்ப்புகளை ஒழுங்கமைத்திருக்கிறார்கள். விழாவின் பிரதான நிகழிடமான கலத்தில் தன்னார்வப்பணியாளர்களால் நிர்வகிக்கப்படும் கஃபே, புத்தகக்கடை, வாசிப்பு/செயற்பாட்டு இடம் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒன்றிணைவினதும் கூட்டுச் செயற்பாட்டினதும் குயர் சாத்தியப்பாடுகளைக் கண்டடடையும் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இது அமைவிருகக்கிறது.
சிறப்பு அழைப்பினார்களாக சரவதேச வளவாளர்களின் நேரடிப் பங்ககேற்பு ஜே. கு. எப் 02 ம் பதிப்பின் ஒரு முக்கிய அம்சமாக அமையாவிருக்கிறது. இவ்வருட விழாவில் எழுத்தாளர், கவிஞர் கிரீஷ் அவர்கள் மொழிபெயர்த்த ‘காதெலனும் பெருங்கடல்’ (வெளியீடு: கூயர் சென்னை குரோனிக்கிள்ஸ், மூலம்: Ocean of Love by Martin Frank) வெளியிடப்படவிருக்கிறது. 1970 களின் தமிழ்நாடு, சிதம்பரம் பின்னணியில் கர்நாடக இசை, முறைதகாக் காதல், மற்றும் நட்பு ஆகியவற்றைக் கையாளும் நாவலை கிரீஷினுடைய மொழிபெயர்ப்பு தமிழ் வாசகப்பரப்பின் கவனத்துக்கு கொண்டு வருகிறது.
யாழ்ப்பாணத்தில் கலம்-இல் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் விழா நிகழ்வுகளுக்கு மேலதிகமாக பிரதேசத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பங்கேற்பாளர்களை அழைத்துச் செல்லும் களப்பயணங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. சூழலியல் சார்ந்து செயற்படும் நிறுவனங்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து வழங்கக்கப்படும் இப்பயணங்கள் உள்ளூர் தொடர்புகளையும் வலையமைப்புகளையும் ஸ்திரப்படுத்தும் விழாவின் நோக்குக்குப் பங்களிக்கின்றன.
விழாவுக்காகத் தயாரிக்கப்பட்ட சிறப்பிதழை பிரதான நிகழிடத்திலும், அனுசரணையாளர் முகவரிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
யாழ் குயர் விழாவானது கவிஞர் காஸ்ரோ பொன்னுத்துரையால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. விழா எடுத்தாளுநராக எழுத்தாளர் ஹரி இராஜலெட்சுமி பணியாற்றுகிறார். 2022 ம் வருடத்துக்கான திரையிடல்கள் இயக்குநர் ஏ. எம். அஸபாக் இனால் ஒருங்கிணைக்கப் படுகின்றன.
யாழ் குயர் விழாவானது முற்று முழுதாக தன்னார்வப் பணியாளர்களால் கொண்டு நடாத்தப்படும் சுயாதீன முன்னெடுப்பாகும். இரண்டாம் பதிப்பின் நிகழ்வுகளை நடாத்துவதற்கு கோதே நிறுவனம் அனுசரணை வழங்குகிறது. கலம், வெண்பா புத்தக நிலையம், foldMedia குழுமம் ஆகியோரின் அனுசரணையும், தனிநபர் நன்கொடைகளும் மேலதிக ஆதரவை வழங்குகின்றன.
விழா அறிவிப்புகளைப் பின்தொடர சமூக வலைத் தளங்களில் Jaffna Queer Festival (JQF) ஐப் பின் தொடரவும்.
விழா நேர சூசி
Ecological issues are focus of Queer Arts Festival in Jaffna